வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

 

சாக்லெட் பாய் மாதவன் எரிமலையாக பொங்கி இருக்கிறார்… அவர் படத்துக்காகவா இல்லீங்க… நாடே தவிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு…

பாஜக.ஆளும் மாநிலம் குஜராத். அதிலும் சமீபத்திய மெகா வெற்றிக்கு சொந்தக்கார பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் இருந்த மாநிலம்.

நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல அங்கேயும் தண்ணீர் பஞ்சம்.

பலராம் தவானி என்ற பிஜேபி எம்.எல்.ஏ.வின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் போய் பேச…

அந்த நேரம் எம்.எல்.ஏ. அங்கே இருந்திருக்கிறார். இந்த பெண் பேசியதை கேட்க மறுத்து அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவரை விட்டு அடித்து வெளியில் தள்ளியிருக்கிறார் எம்.எல்.ஏ.

அப்போதும் ஆத்திரம் அடங்காத எம்.எல்.ஏ. தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து தெருக்குழாயடி சண்டை போல ஆபீஸ் அறையில் இருந்து பாய்ந்து வந்து அந்த பெண்ணைப் பிடித்து சரமாரியாக தாக்கி கீழே தள்ளி எட்டி மிதித்திருக்கிறார்.

ஒரு எம்.எல்.ஏ. இத்தனை அராஜகம் செய்யும் இந்த காட்சியை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த அராஜக செயலை அங்கே வேடிக்கை பார்த்த ஏதோ ஒருவர் படம் பிடித்து இணையத்தில் விட… நாடே அதிர்ச்சி அடைந்தது.

 

சமூக நீதி பேசுவோம் என்று வாய் சவடால் விட்டு ஆட்சியை பிடித்த ஒரு சில நாட்களில் பிரதமர் மோடியின் சொந்த மாநில ஆண் எம்.எல்.ஏ. அந்த தொகுதி பெண் மீது கொலை வெறி தாக்குதல் நாட்டை கொந்தளிக்க வைத்தது.

விஷயம் வெளியே ஆதாரத்துடன் வந்து விட்டதால் அந்த எம்.எல்.ஏ. உடனே செய்தியாளர் கூட்டத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்

இந்த அடிதடி நிகழ்ச்சியை அப்படியே படம் பிடித்த ஒரு புண்ணியவான் இணைய தளத்தில் வெளியிட்டு விட்டார்.

இத்தனை களேபரம் நடந்தும் பாஜக கட்சி மேலிடமோ… குஜராத் பாஜகவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காது கேளாதவன் காதில் ஊதிய சங்காக கண் தெரியாத பார்வையில்லாதவன் போல கம்முனு இருக்கு…

ஆனா… நம்மூர் சாக்லெட் பாய் மாதவன் இந்த வீடியோவை பார்த்துவிட்டு கொந்தளித்து விட்டார்.

அவர் வெளியிட்ட டிவிட் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து… அவர் சாரி கேட்டதை எல்லாம் ஏத்துக்க முடியாது. மொதல்ல அந்தாள் எம்.எல்.ஏ. பதவிய புடுங்கிட்டு … அந்தாளை புடிச்சி ஜெயிலில் போடுங்க… இந்த நாட்டுக்கு எவ்ளோ பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கார் அந்த பாஜக எம்.எல்.ஏ.” அப்படின்னு கொந்தளிச்சிட்டாரு.

அட நீங்க எவ்ளோ வேணா கொந்தளிங்கடா நாங்க எப்பவுமே இப்படி தாண்டா இருப்போம்னு பாஜக கம்முனு இருக்கு…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீது என்ற பெண் புகார் அளித்திருக்கிறார்.

பார்ப்போம் பிரதமர் மோடி இதற்கு என்ன பதில் சொலவார் என்று…!

471 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன