வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

தமிழகம் கடும் எதிர்ப்பு “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள மத்திய அரசு திருத்தம்..!

 

இந்தி கட்டாயமில்லை தமிழகத்தின் எதிர்ப்பால் திருத்தம் செய்த மத்திய அரசு.

புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு அளித்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்றி அமைப்பது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூறினார்கள்.

கடும் எதிர்ப்பின் காரணமாக திருத்தப்பட்ட புதிய வரைவு அறிக்கையின்படி, தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது, இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாவது மொழி பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வரைவு அறிக்கையில் திருத்தம் செய்து விட்டதாக மத்திய அரசு கூறினாலும் மும்மொழி கட்டாயம் என்ற உத்தரவை நீக்கவில்லை.

ஆங்கிலம் அதோடு மாநில மொழியுடன் 3வது ஒரு மொழியை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று சொல்லி விட்டு எல்லா பள்ளிகளும் மற்ற மாநில மொழிகளை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் ஆசிரியர்களை நியமிக்க பாஜக அரசு ரகசிய திட்டம் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரம் தமிழகத்தில் தொடர்ந்து இரு மொழி கொள்கை நீடிக்கும் என்று அதிமுக அரசு அறிவித்துள்ளது.

576 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன