
சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக சீன மொழி டப்பிங் செய்யும் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது.
தமிழ், இந்தியில் அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஆனால் சீனாவில் நவம்பர் அல்லது டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி வசூல் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
அதனால் அதே நிறுவன தயாரிப்பை சீனாவில் வெளியிட சிக்கல் எதும் இருக்காது.
அஜீத் படம் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
