ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

உலகின் முதல் “V” வடிவ விமானம்… 300 பேர் பறக்கலாம்..!

 

உலகில் அதிவேக பயணத்தில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது விமான பயணம்தான்.

அதிலும் ஏர்பஸ் விமானங்களிதான் அதிக பயணிகள் ஒரே நேரத்தில் பயணிப்பார்கள்.

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, எரி பொருள் சிக்கனம் ஆகியவற்றை மனதில் வைத்து ஒவ்வொரு நாடுகளும் தினம் தினம் புதிது புதிதான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நெதர்லாந்து நாட்டின் கே.எல்.எம்.விமான நிறுவனம் புதிய விமானம் ஒன்றை வடிவமைத்து உள்ளது.

ஆங்கில எழுத்து “V” வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 314 பயணிகள் பறக்க முடியுமாம்.
அதோடு மற்ற விமானங்களை விட 20 சதவீத எரிபொருள் சிக்கனமும் கிடைக்குமாம். பறவையின் இறக்கை போல விமானம் வடிவமைக்கப்பட்டதால் மேலே எழும்புவதற்கும், கீழே இறங்குவதற்கும் மிகுந்த வசதியாக இருக்குமாம். குறிப்பாக பாதுகாப்பு மிக அதிகமாம்.
விரைவில் இந்தவகை வி வடிவ விமானம் பயணிகள் சேவைக்கு வரும்.

570 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன