புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால் மறுப்பு

 

ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் – வழக்கம் போல விஷ்ணு விஷால்

விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார்.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது.
இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது.

ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார்.

அப்படி இருந்தாலும் காதல் என்றுபரவிய செய்தியை விஷ்ணு விஷால் மறுக்கவில்லை என்பதால் இந்த ஜோடி விரைவில் நல்ல தகவலை சொல்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

699 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன