
டகால்டி போஸ்டர் சர்ச்சை… மன்னிப்பு கேட்ட சந்தானம்
டகால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து நடிகர் சந்தானம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் என பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் தங்கள் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தாலோ அல்லது அதுபோன்ற படங்களை வெளியிட்டாலோ முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தது யாராக இருக்கும் என்றால் அது சாட்சாத் பாமகவின் தூண்… முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசாகதான் இருக்கும்.
"Dacalty" first look poster was inadvertently uploaded. Have realised that it may promote smoking which is injurious to health. Will ensure my future films will never carry such posters.
— Santhanam (@iamsanthanam) June 8, 2019
ஆனால் நடிகர் சந்தானம் தனது டகால்டி பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்று டிசைன் வெளியிட்ட பின்னும் பாமகவோ, அன்புமணி ராமதாஸ் தரப்பிலோ எந்த கண்டன அறிக்கை வெளியாகவில்லை.
காரணம் சந்தானம் பாமகவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த மவுனம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் புகை பிடிக்கும் போஸ்டர் வெளியிட்டதற்கு சந்தானம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது சமூக வலை தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.
