புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தமிழக முதல்வரை சந்திப்பேன் பாண்டவர் அணி வேட்பு மனுத்தாக்கல் செயத பின் விஷால் பேட்டி

 

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வேட்புமனு தாககல் செய்தது.

விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் தலைமையில் பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன், லதா, குஷ்பு, கருணாஸ் மனோபாலா, சரவணன், கோவை சரளா, சோனியா, ரமணா, தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்த உதவி தேர்தல் அதிகாரி மோகனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நாசர், கார்த்தி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் இருந்ததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் விஷால் பேசும்போது: நடிகர் சங்கத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே பதவிக்கு வந்தோம். நாங்கள் முந்தைய தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

வேறு வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் நடிகர் சங்கம் என்று வரும்போது நாங்கள் எல்லாரும் கலைஞர்கள் தான்.
தேர்தல் நேரத்தில் ஒருவரை பற்றி ஏதாவது சொல்லி ஓட்டுக்களை வாங்கும் எண்ணம் இல்லை. ஐசரி கணேஷ் அவர்களை சந்தித்து பேசிய போதும் அவர் என்ன நோக்கத்தில் நிற்கிறார் என்பதை சொன்னார், நான் என்ன நோக்கத்திற்காக நிற்கிறார் என்பதை சொன்னேன்.
அவர் சொன்ன நோக்கம் எனக்கு உடன்படாததால் மீண்டும் போட்டியிடுகிறேன். நாங்க அறிவித்த சிலர் அங்கே போனது ஏன் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். பல மிரட்டலகளை பார்த்து வருகிறேன். விட்டு குடியிருப்போர் சங்க தேர்தலில் நின்றால் கூட மிரட்டல் வரும் என்பது தெரிந்த விஷயம் தான்.

நடிகர் சங்க தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.

488 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன