செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 2019 ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதில் நடிகர் நாசர் தலைமையிலும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலும் இரு அணிகள் நேர் எதிராக தேர்தலை சந்தித்தது. முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தலை நடத்தியதால், தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.   இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார், அதுவரை அரசு நியமித்த தனி அதிகாரி சங்கத்தை நிர்வகிப்பார் எ...
தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்...! நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாரா அளித...
நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் நாசர்-விஷால் கூட்டணி சார்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை சந்தித்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பல முயற்சிகள் நடை பெற்றன. நடிகர் எஸ்வி சேகர் ஒரு பக்கம் "தனக்குள்ள" அதிகாரத்தை வைத்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்தல் நடத்தும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசார் கை விரித்தனர். அதே நேரம் எஸ்.வி.சேகர் உட்பட 4 பேர் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் திடீரென கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார். இதை எதிர்த்தும் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்தி முடிக்க ப...
நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..! நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 3171 ஓட்டுக்களில் மாலை 5 மணிவரை 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். பதிவான வாக்குச் சீட்டுகள் உள்ள பெட்டிகள் மிக பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்...
நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் – ஆனந்தராஜ் ஆவேசம்

நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் – ஆனந்தராஜ் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் - ஆனந்தராஜ் ஆவேசம் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. வாக்களித்து திரும்பும் திரை பிரபலங்கள் பல கருத்தை சொல்லி செல்கிறார்கள். அப்படி வாக்களித்து திரும்பிய ஆனந்தராஜ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனந்தராஜ் நிருபர்களிடம் பேசும் போது “நல்லது செய்யும் அணி கண்டிப்பாக வெற்றிபெறும். யார் வெற்றிபெற்றாலும் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு கல்வெட்டு வைக்கும்போது “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று மட்டுமே வைக்க வேண்டும். இன்னார் திறந்தார், அவர் திறந்தார், இவர் திறந்தார் என கல்வெட்டில் ஏதாவது எழுதியிருந்தால், ஒரு கடப்பாறையை கொண்டு வந்து நானே அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கி விடுவே. ஏனென்றால் இந்த கட்டிடம் கட்டும் முயற்சியில் அனைத்து நடிகர்களின் பங...
முக்கியமான ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தமளிக்கிறது – கமல்

முக்கியமான ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தமளிக்கிறது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். சங்கத்தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கூடாது என்பது என் விருப்பம் என்றார் கமல்....
பாவம் மோகன்… இந்த முறையும் கள்ள ஓட்டால் ஏமாற்றம்..!

பாவம் மோகன்… இந்த முறையும் கள்ள ஓட்டால் ஏமாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் மைக் மோகன் வாக்களிக்க வந்தார். ஆனால் அவர் ஓட்டை யாரோ ஏற்கனவே பதிவு செய்து விட்டார்கள் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கடந்த முறை தேர்தல் நடந்த போதும் மைக் மோகன் வாக்கு இதே போல கள்ள ஓட்டாக பதிவாகி இருந்தது. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஷால் மயங்கி விழுந்தார் என்ற பரபரப்பெல்லாம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலிலும் அதே...
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர். ...
தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

தாமதமான தபால் வாக்கு… ஓட்டுபோட முடியாமல் போனது – ரஜினி வருத்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் எனது வாக்கை பதிவுசெய்ய இயலவில்லை - ரஜினிகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் 23ம் தேதி காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது: மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு...
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த ப...