புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0… ஜூலை 25ல் ரஷ்யாவில் ரிலீஸ்

 

சீன மொழியை தொடர்ந்து ரஷ்ய மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0

லைகா நிறுவனம் த்யாரித்த ரஜினியின் பிரமாண்டமான படம் 2.0.
இந்த படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தமிழ், இந்தியில் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களை குஷி படுத்தியது.

அக்‌ஷய் குமார் நடிப்பும், ரஜினி நடிப்பும் மிரட்டலாக இருந்தது. 3டி தொழில்நுட்பம் பரவலாக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய பணிகள் நடந்தது. வரும் ஜூலை 12ம் தேதி சீனாவில் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரிமியர் ஷோ வரும் 25ம் தேதி சீனாவில் நடக்கிறது.

இதைப்போலவே சீன மொழி பேசப்போகும் ரஜினியின் 2.0 அடுத்ததாக ரஷ்ய மொழி பேசப்போகிறது. லைகா நிறுவனம் சீன மொழியில் டப்பிங் பணிகளை செய்து முடித்து உள்ளது.

சீனாவில் வெளியான இரு வாரங்கள் கழித்து ஜூலை 25ம் தேதி ரஷ்யாவில் 2.0 ரிலீஸ் ஆகப் போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் உலகம் முழுதும் அந்தந்த மொழிகளில் டப் செய்து வெளியாவது இதுதான் முதல் முறை.

ஹாலிவுட் படங்களை நம்மூரில் பார்த்து வாய் பிளந்த நிலை போய் இப்போது நம்மூர் நடிகரின் படமும் உலக அரங்கில் வெளியாவது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன