வருகிறது இ-சிகரெட்டுகளுக்கான தடை..!

74 Views

 

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிகரெட் பாதிப்பு மரணம் வரை கொண்டு செல்லும் என்பதால் பல நாடுகளில் சிகரெட்டுக்கு தடை உள்ளது.

நம்மூரிலும் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை உள்ளது.

ஒரு சில நாடுகளில் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது நிகோடின் விஷத்தன்மையை குறைவாகவே கொடுக்கும் என்பதால் இ-சிகரெட் பயன்பாட்டில் உள்ளது.


இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தும் படி உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது.

அதில் இ-சிகரெட்களும் புகைப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனபதோடு சிகரெட் தரும் அனைத்து வகை பாதிப்புகளும் இ-சிகரெட்டிலும் இருப்பது தெரியவந்தது

இதைத்தொடர்ந்து அந்த அமைப்பு ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையின் படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இ-சிகரெட்டுகளை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதோடு அவற்றையும் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இ-சிகரெட்டு மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *