வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

 

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியது. வரும் 23ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கு விஷாலின் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ்-பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி இரண்டிலும் சேர்த்து தனித்தனி மனுக்களை கணக்கிட்டால் மொத்தம் 79 பேர் போட்டியிடுகிறார்கள்.

பாண்டவர் அணியின் தலைவர் நாசரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தும், சின்ன சின்ன வேஷங்களில் நடித்தவரும் டப்பிங் யூனியனில் ராதாரவியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவருமான சாலமோன் என்பவர் வழிமொழிந்தும் உள்ளனர்.

நாசரின் வேட்புமனுவை கமல்ஹாசன் முன் மொழிந்ததால் கமல் ஆதரவு பாண்டவர் அணிக்கு என்பது வெட்ட வெளிச்சம் ஆனது.

ஆனால் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் வேட்பாளர் பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்த பின் “ரஜினி சொல்லித்தான் தேர்தலில் நிற்பதாக” சொன்னார். இதற்கு ரஜினி தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்டவில்லை.


அதே நேரம் பாக்யராஜ் மும்பையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினியோடு தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் விஷாலிடம் செய்தியாளர்கள் பேசிய போது, ‘ரஜினி, கமல் இருவருமே அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கவில்லை. எனவே ரஜினி, கமல் ஆதரவு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

தேர்தலில் போட்டியிடும் இரு
அணியினர்களும் மரியாதை நிமித்தமாக ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து இதுவரை என்ன செய்துள்ளோம், இனிமேல் என்ன செய்வோம் என்பதை விளக்குவோம். அதன்பின்னர் அவர்கள் யாருக்கு ஆதரவு? என்பதை முடிவு செய்வார்கள்’ என்று கூறினார்.

என்னதான் விஷால் அப்படி கூறினாலும் பொதுவாகவே ஒரு கருத்து உண்டு… கமல் எடுக்கும் முடிவுக்கு நேர் எதிராகவேதான் ரஜினி முடிவு இருக்கும் என்று ஒரு கருத்து உலா வருகிறது. இதை தெளிவு படுத்தும் முழு பொறுப்பும் கமல், ரஜினிக்குத்தான் உண்டு.

931 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன