வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: அரசியல் புகுந்த நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்தில் அரசியல் வருத்தப்பட்ட நெப்போலியன்..! நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அப்போது விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர். அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஆனால் இப்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார். ...
நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் நாசர்-விஷால் கூட்டணி சார்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை சந்தித்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பல முயற்சிகள் நடை பெற்றன. நடிகர் எஸ்வி சேகர் ஒரு பக்கம் "தனக்குள்ள" அதிகாரத்தை வைத்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்தல் நடத்தும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசார் கை விரித்தனர். அதே நேரம் எஸ்.வி.சேகர் உட்பட 4 பேர் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் திடீரென கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார். இதை எதிர்த்தும் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்தி முடிக்க ப...
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார். நடிகர் விஜய் வரும் போது கடும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. போலீசார் சிரமபட்டு விஜயை பாதுகாப்புடன் வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர். ...
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த ப...
நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களை ஈடுபடுத்தி சிக்கிக் கொண்ட சுவாமி சங்கரதாஸ் அணி … ஆடியோ வெளியாகி பரபரப்பு..!

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களை ஈடுபடுத்தி சிக்கிக் கொண்ட சுவாமி சங்கரதாஸ் அணி … ஆடியோ வெளியாகி பரபரப்பு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகர் சங்க தேர்தலில் சங்கத்தில் இல்லாத உறுப்பினர்கள், தன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்களை தேர்த பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக ஐசரி கணேஷ் மீது பாண்டவர் அணி ஆதாரங்களுடன் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியின் சார்பில் சுவாமி சங்கரதாஸ் அணியும், கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் - விஷால் கூட்டணியின் பாண்டவர் அணி சின்ன மாற்றங்களோடு தேர்தலில் நிற்கிறது. ஒவ்வொரு அணியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் கூற முடியாததால் கட்டிடம் தாமதமானதற்கு இவர்கள் தான் காரணம் என்று சுவாமி சங்கரதாஸ் அணி பிரசாரத்தில் ஈடுபடுகிறது. இதற்கிட...
தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தோல்வி பயம்... அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் - கோடங்கி ஸ்பெஷல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதிய...
நடிகர் சங்கத்தில் 30 ஆண்டில் செய்ய முடியாததை 3 ஆண்டில் செய்திருக்கிறோம் – விஷால்

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டில் செய்ய முடியாததை 3 ஆண்டில் செய்திருக்கிறோம் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தல் தேதி நெருங்க நெருங்க பல பரபரப்பான சம்பவங்கள் திரையுலகில் நடந்து வருகிறது. பாக்யராஜ்- ஐசரி கூட்டணியின் சுவாமி சங்கரதாஸ் அணி நடிகர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதே போல நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கும் போய் ஆதரவு கேட்டார்கள். இந்த நிலையில் நடிகர் விஷாலும் திடீரென நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் விஷால் கூறியது: நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம். நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது....
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்... ஒரு பகீர் ரிப்போர்ட் நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே. முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள். 29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள். விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்தத...
நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் ரஜினி – கமல் ஆதரவு யாருக்கு… பரபரப்பு ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் ரஜினி - கமல் ஆதரவு யாருக்கு... பரபரப்பு ரிப்போர்ட் நடிகர் சங்க தேர்தல் அடுத்த கட்டத்தை எட்டியது. வரும் 23ம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கு விஷாலின் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ்-பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி இரண்டிலும் சேர்த்து தனித்தனி மனுக்களை கணக்கிட்டால் மொத்தம் 79 பேர் போட்டியிடுகிறார்கள். பாண்டவர் அணியின் தலைவர் நாசரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தும், சின்ன சின்ன வேஷங்களில் நடித்தவரும் டப்பிங் யூனியனில் ராதாரவியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவருமான சாலமோன் என்பவர் வழிமொழிந்தும் உள்ளனர். நாசரின் வேட்புமனுவை கமல்ஹாசன் முன் மொழிந்ததால் கமல் ஆதரவு பாண்டவர் அணிக்கு என்பது வெட்ட வெளிச்சம் ஆனது. ஆனால் சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் வேட்பாளர் பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்த பின் "ரஜினி...