வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

 

காதுல பூ வைக்கலாம்… தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ… மூச்சு திணறி செத்துற மாட்டாளா…

அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம்.

கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க… தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது.

கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வைக்க சதி செய்கிறார்கள்.

வங்கி கொள்ளையர்கள் சிக்கினார்களா அல்லது தீவிரவாதிகள் திட்டம் நிறைவேறியதா என்பது தான் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் கதை.

இதை அப்படியே சொல்லியிருந்தா கூட சுவாரஸ்யம் இருந்திருக்கும். மிஷ்கின் மாதிரி ஒரு இயக்குனர் யூனிபார்ம் போடாத கமிஷனர் யார் பேச்சையும் கேக்க மாட்டார். யாரையும் மதிக்க மாட்டார்னு சொல்லி அவரே கைத்துப்பாக்கி எடுத்து டுப்பு டுப்புன்னு சுட்டுகிட்டு… ஓடுறதும்… கை ஒடிஞ்சிப் போய் வாக்கி டாக்கில பேசிகிட்டே நடக்குறதும்… அப்பப்பா… ரொம்ப நடிப்புடா சாமி முடியல மிஷ்கின் கொஞ்சம் குறைச்சிகிங்க நடிப்பையும் எமோஷனையும்… செயற்கையா செஞ்சு வைச்ச மாதிரி இருக்கு…

இவரும் ஒரு இயக்குனர் சுசீந்திரன்… யப்பா சாமி உங்க ஒடம்பு இருக்குற சைஸ்ல துப்பாக்கி தூக்குப்பா… மிஷின் கன்னை ஒத்தை கையாலயே தூக்கி சும்மா சகட்டுமேனிக்கு சுட்டு படம் பாக்க வர்ற ரசிகனை எல்லாம் இப்படி தலைதெறிக்க ஓட விட்டா எப்படி… இவ்ளோ நடிப்பு ஆகாதுடா சாமி…

விக்ராந்த்… ஐய்யோ பாவம்… அவரும் படத்துக்கு படம் வெரைட்டி காட்ட டிரை பன்னாலும் அது மட்டும் வந்து தொலைய மாட்டேங்குது… சோகம், சந்தோஷம்… சண்டை எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ரியாக்‌ஷன்… போலீஸ் சுத்தி வளைச்சிடுச்சி பாத்தாலே சுடுறாங்க… அப்போ சாவகாசமா ஆஸ்பத்திரியில இருக்கும் குழந்தைகிட்ட சைகையில பேசுறது… சின்ன குழந்தைகள் சைக்கிள்ள தப்பிக்கிறதுன்னு அடடா… என்னம்மா கதை பன்னியிருக்காரு இயக்குனர்…

அதுல்யா… ஒரு சினிமாவுல ஹீரோயின் அப்படின்னு சொல்ல இந்த கதாபாத்திரத்திரம்.

ஒரே ஆறுதல் குழந்தை மானஸ்வி… இமைக்கா நெடிகள் படத்தில் வாயாடி… இதில் சைகையில் ரசிக்க வைக்கிறார்.

பத்திரிகை, சேனல்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது. அவ்ளோ அப்த்தம்.

“புளியம்பட்டிக்கு 2 ரூபா டிக்கெட்… பொள்ளாச்சிக்கு 4 ரூபா டிக்கெட்…

அப்ப… புளியம்பட்டிக்கு ஒரு டிக்கெட்…

என்னது…

புளியம்பட்டிக்கா…

இல்ல… பொள்ளாச்சி போயிட்டு வரும்போது புளியம்பட்டில இறங்கிக்கிற மாதிரி ஒரு டிக்கெட்…

ஒரு படத்துல வர்ற காமெடி… அப்படி இருக்கு சுட்டுப் பிடிக்க உத்தரவு திரைக்கதை மேக்கிங்…

கல்பதரு பிக்சர்ஸ் அப்படின்னு புது நிறுவனம் இந்த படத்தை தயாரிச்சி இருக்காங்க. அவங்க கிட்ட இந்த இயக்குனர் என்ன சொல்லி ஓகே பன்னார்னு படம் பாத்துட்டு 3 நாள் ஆன பின்னாடியும் அந்த சூட்சமம் மட்டும் ஒரு மண்ணும் விளங்கல எனக்கு…

கடைசியா ஆனா முக்கியமா… தீவிரவாதிகள் அப்படீன்னா அது ஒரு குறிப்பிட்ட மத்த்தை மட்டுமே ஏன் காட்டி சர்ச்சையில சிக்குறீங்க… அதிலும் குறிப்பா கோவையில ஆர்.எஸ்.புரம்னு ஒரு பகுதி அங்க வந்து வெடிகுண்டு தயாரிக்கிறாங்கன்னு இப்ப சொல்ல வேண்டிய அவசியம் என்ன… ஒரு திரைப்படம் தவறுகளை சுட்டிக்காட்டலாம்… அல்லது சமூகத்தை மாற்றும் நல்ல கருத்தை சொல்லலாம்… அல்லது நகைச்சுவை கருவை ஜாலியாக எடுத்து காட்டலாம்… அதை விட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை தேவை இல்லாமல் வம்பாக காட்சிப் படுத்தும் எண்ணம் மிக ஆபத்தானது. இனியாவது கல்பதரு நல்ல விஷயங்களை உருவாக்கினால் நலம்..!

குறிப்பு: விஷயத்தை சொல்லாமல் விஷத்தை விதைத்திருப்பதால்தான் இயக்குனர் பெயரை குறிப்பிடவில்லை.

– கோடங்கி

1,290 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன