புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

எம்பி ஆன நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..!

 

நடிகைக்கு துருக்கியில் தொழிலதிபருடன் டும் டும்..!

பாராளுமன்ற தேர்தலில் பசிராத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான், மூன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வயது 29. பிரசாரத்தின்போது, இவரைக் காண பெரும் கூட்டம் கூடியது.

முதல்முறை எம்.பி.யாகி உள்ள நுஸ்ரத் ஜஹானுக்கு துருக்கி நாட்டில் உள்ள போட்ரம் நகரில் திருமணம் நடைபெற்றது. மணமகன் பிரபல தொழிலதிபர் நிகில் ஜெயின்.

நுஸ்ரத் ஜஹானின் பெற்றோர், சகோதரி மற்றும் இதர நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நுஸ்ரத் ஜஹானின் நெருங்கிய தோழியும், அவரைப்போல் எம்.பி. ஆகி உள்ள வங்காள நடிகையுமான மிமி சக்ரவர்த்தியும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தில் மணமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நுஸ்ரத் ஜஹான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

606 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன