வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

 

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தர பிகில் படத்தின் 2வது லுக் போஸ்டர் அதிகாலையில் வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய்- நயன்தாரா நடிக்கும் தளபதி63 படத்தின் பெயர் நேற்று மாலை வெளியானது.

பிகில் என தலைப்பு வெளியானதும் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள். அதோடு படத்தில் விஜய் இரட்டை வேஷத்தில் நடிப்பது உறுதியானதால் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

தலைப்பு வெளியான சில மணி நேரம் பிகில் தான் இணையத்தை ஜாம் ஆக்கி வைத்திருந்தது.

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான இன்று அதிகாலை பிகில் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது.

அதில் 4 விஜய் கெட்டப் இடம் பெற்றுள்ளது. மைக்கேல் என்ற கதாபாத்திர பேருடன் கால்பந்தாட்ட வீரராகவும், காவி வேட்டி கட்டிய ஒரு தாதா கெட்டப்பிலும் படு ஸ்மார்ட்டாக இந்த லுக் காணப்பட்டது.

செகண்ட் லுக் போஸ்டரும் வெளியான சில மணி நேரத்தில் இபையத்தை ஜாம் ஆக்கி வைரலாக பரவி வருகிறது. பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்.

962 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன