புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்… வாக்கு எண்ணிக்கை கூடாது – நீதிமன்றம் அதிரடி

 

நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்… வாக்கு எண்ணிக்கை கூடாது – நீதிமன்றம் அதிரடி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சங்கரதாஸ் சுவாமிகள் அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜ், பொதுச்செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பல்வேறு இடையூறுகளை எஸ்.வி.சேகரும், ராதாரவியின் உதவியாளரும் ஏற்படுத்தினர்.

கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதோடு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இடம் பாதுகாப்பு குறைவு என காரணம் சொல்லி மாற்று இடம் கேட்டது நீதிமன்றம்.

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பரபரப்பான தீப்பளித்தார்.

அதன்படி அறிவித்த நாளில் தேர்தல் நடத்தலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கையை வழக்கு முடியும்வரை எண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்.

நடிகர் சங்க தேர்தலை எப்படியாவது நிறுத்தி காட்டுவோம் என திரைமறைவு வேலைகள் செய்த பலரின் முகத்தில் கரி பூசி உள்ளது இந்த தீர்ப்பு.

1,263 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன