வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

 

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது.

படத்தின் முதல் இரு போஸ்டர்கள் நேற்று வெளியான நிலையில், இன்று 3வது போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் தலைப்பு பற்றி படக்குழுவினர் கூறும்பொழுது, வடசென்னை பகுதியில் குறிப்பாக ராயபுரம் ஏரியாவில், கால்பந்து போட்டிகளின் போது, நடுவர்கள் விசில் ஊதுவதை, பிகில் என அழைப்பதால், விஜய் படத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

தலைப்புக்கு வந்த விளக்கத்தை தொடர்ந்து “படம் வடசென்னை மக்களைப் பற்றி பேசுகிறதோ என்று கிசு கிசுக்கிறார்கள்.

483 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன