புதன்கிழமை, ஜூலை 29
Shadow

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

 

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கப்பூர் தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனை திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார். ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை, என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சிக்கலால் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா… அல்லது ரிலீஸ் சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.

621 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன