
மகள் திருமண சர்ச்சை… கிறிஸ்த்தவ மதம் மாறினாரா கர்னாடக பாடகி சுதா ரகுநாதன்..!
இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பிரபலமானவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமூகவலை தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அதில் , சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தது.

அதிலும் அவர் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதனால் சுதாரகுநாதனுக்கு பலதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாதன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும், கச்சேரிகளில் பாட அனுமதி தரக்கூடாது என்றும் வலியுறித்தியுள்ளனர்.

சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு அதிகமாக எழுந்தாலும் அதே அளவுக்கு ஆதரவு குரலும் எழாமல் இல்லை.
சுதா ரகுநாதன் மகள் மாளவிகா அமெரிக்காவில் இருக்கிறார். அங்கே மைக்கேல் என்பவரை காதலித்து அந்த காதல்தான் இப்போது கை கூடியுளது.
