ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

16 கோடியில் மும்பையில் 14வது மாடியில் வீடு வாங்கிய தமன்னா..!

 

மும்பை அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்மன்னா, மும்பை வெர்சோ வாவில் பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778. இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தரகர்களின் கூற்றுப்படி இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வர இருக்கும் புதிய கட்டிடத்திற்கு சதுர அடி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அப்படியிருக்க தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி தமன்னா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில் தமன்னா மற்றும் அவரது பாட்டி என இருவர் மட்டுமே குடியேறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

627 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன