வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

பள்ளிகளில் வாத்தியாரே இல்லாமல் நீட் தேர்ச்சியை பற்றி பேசலாமா – மத்திய மாநில அரசுகளை சாடிய ஜோ..!

 

கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் “நீட்” தேர்ச்சி விகிதம் குறைகிறது எனக்கூறுவது தவறு – மத்திய,மாநில அரசுகளை சாடிய ஜோதிகா

ராட்சசி பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா ரொம்பவே ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியது: அகரம் பவுண்டேசன் சார்பில் ஆண்டுதோறும் பல கிராமப்புற மாணவர்களை சந்திக்கிறேன். அவர்களில் பலர் சொல்வது எங்கள் பள்ளியில் பல நேரங்களில் ஆசிரியர்களே இருப்பதில்லை.

பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறது என்று, முதலில் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொன்னால் எப்படி.
அதோடு இல்லாமல் நான் டிவிட்டரில் சில விஷயங்களை பார்த்தேன். நான் டிவிட்டரில் இல்லை ஆனால் என் கணவர் டிவிட்டர் மூலமாக ராட்சசி படம் பற்றி கருத்துக்களில் பல இது பள்ளிக்கூடம் போல உள்ளது, சாட்டை போல உள்ளது நான் லேடி சமுத்திரக்கனி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

ஏன் இப்படி பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆக்‌ஷன் இல்லையா என்று கேட்கிறார்கள். ஒரு படத்தில் ஹீரோவை 3 ஹீரோயின்கள் காதலிப்பதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதும் பர்ஸ்ட் ஆப் முடிந்து கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு முன் மறுபடியும் ஆகஷன் காட்சிகள் என்பது காலம் காலமாக மாறி மாறி எடுக்கப்படுகிற சினிமா இதை பற்றி எதையும் பேசுவதில்லை.

ஆனால் சமூகத்திற்கு செய்தி சொல்லும் இது போன்ற படங்கள் நூறு வந்தாலும் அதை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு ஜோதிகா பேசினார்.

1,220 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன