புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: ஜோதிகா

மீண்டும் போலிவுட்டில் களம் இரங்கும் ஜோதிகா!

மீண்டும் போலிவுட்டில் களம் இரங்கும் ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் ம...
பிரபல நடிகரின் மகனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

பிரபல நடிகரின் மகனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஓ மை டாக் படத்தில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் இதனை பகிர்ந்துள்ளனர்....
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா! திரையுலகில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிகைகள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் பானுமதி, சாவித்ரி, விஜய் நிர்மலா ஆகியோர் ஒரு திரைப்பட இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது உள்ள நடிகர்களில் சிலர்க்கு மட்டும்தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதில் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் இவரும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது....
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா! கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது....
நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  *தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* *அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!* நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.   சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் ...
சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெ தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நல்ல லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி ...
டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படம் டிஜிட்டல் ரிலீஸ்... சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு! ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை கடந்த மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கால் முடங்கிப் போனது. திரையுலகமும் ஒட்டுமொத்த பணிகளை நிறுத்தி முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். எல்லா பணிகளும் முடங்கி இருந்தாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமே இப்போது தனது வேலையை முன்பைவிட மிக அதிகமாக பரபரப்பாக இயங்கி வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டாலும் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் டிஜிட்டல் மூலமாக திரைப்படங்களை வீடுகளிளேயே பார்த்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக ஜோதிகாவின் ப...
ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!

ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜோதிகாவின் புதுப்படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய திட்டம்! கொரானா காரணமாக மூடப்பட்டு இருக்கும் தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் இருக்கிறது. அதோடு, இந்த கொரானா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட படங்களின் நிலை பெரும் சிரமத்தில் உள்ளது. இந்த சூழலில் நாடு முழுதும் டிஜிட்டல் மூலமாக நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதனால் தியேட்டர்கள் ரிலீசுக்கு காத்திருக்காமல் நேரடியாக டிஜிட்டலில் படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதாக நம்பப்படுகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் ...
பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

பாரதி கண்ட புதுமைப்பெண் – ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   திருமதி ஜோதிகா மதம் கடந்தவர். அவரின் பிறப்பை வைத்து அவரது பொது அறிவை எடைபோடும் சிலரைப் பார்த்தால் உங்களை இன்னும் எத்தனை கொரானா தின்றாலும் திருந்த மாட்டீங்கடான்னுதான் சொல்லத் தோணுது. இஸ்லாமிய பெண்ணானவர், ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தால்- அந்த இந்து ஆண், முஸ்லிம் ஆகி.. சுன்னத் செய்து வேறு பெயர் வைத்த பின்தான் சாத்தியம். ஆனால் திருமதி ஜோதிகா காதலித்தவரை எந்த மாற்றமும் செய்யாமல் காதலுக்காக காதலனை மட்டுமே திருமணம் செய்துகொண்டவர். ஒரு இந்து இறை நம்பிக்கை அதிகம் கொண்ட குடும்பத்தில் இணைந்துகொண்டு அவர்களோடு அவர்களாக பல ஆண்டுகளாக வாழ்பவரை எது திடீரென முஸ்லிமாக நினைக்க வைத்தது? உங்கள் வழிக்கே வருவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட அவர் ஒரு கன்வெர்...
ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சியாக ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சி ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..! பிரபலமான மாஸ் காட்டும் நடிகர்களின் படங்கள் மட்டுமே சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலான நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ம...