
ஹீரோக்களுக்கு இணையாக அதிகாலை காட்சி ரிலீஸ் ஆகி மாஸ் காட்ட உள்ள ஜோதிகா..!
பிரபலமான மாஸ் காட்டும் நடிகர்களின் படங்கள் மட்டுமே சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலான நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது
இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது
ஏற்கனவே படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அதிகாலை காட்சி போடுவதால் இன்னும் அதிக ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
