சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும்…!

 

நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும்…!

இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர். அதோடு இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்கள்.

இப்போது பெண் முடிவாகி விட்டது. அதை வழக்கம் போல குறியீடாக பிரேம்ஜி வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் போட்டிருக்கும் டி சர்ட்டில் திருமணத்திற்கு தயாரான ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள். கீழே கேம் ஓவர் என்றும் பிரேம்ஜி தலை குனிந்து முகம் காட்டாமல் பவ்யமாக நிற்கிறார்.

இனி மொட்டைப் பசங்க சகவாசம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார் பிரேம்ஜி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன