திங்கட்கிழமை, மே 13
Shadow

பிரபல நடிகரின் மகனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா!

 

நடிகர் அருண் விஜய் தற்போது ‘ஓ மை டாக்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ஓ மை டாக் படத்தில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் இதனை பகிர்ந்துள்ளனர்.

111 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன