ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

 

தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தார் போல வரும் சில படங்கள் காலம் காலமாக மக்களை பேச வைக்கும்.
இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய மெகா உதாரணம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பரியேறும் பெருமாள்.

கதிர் , ஆனந்தி, லிஜீஸ் மாரிமுத்து உட்பட பலர் நடித்த இந்த படம் எந்த ஜாதி அடையாளமும் இல்லாமல் ஜாதி துவேஷங்களை தோலுரித்தது.

அதோடு திரைக்கதை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதோடு பல நாடுகளில் விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது.

இந்த வெற்றியின் மகுடமாக 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையமைப்பு, திரைக்கதை வடிவம் ஒரு பாடமாக இடம் பிடித்து படம் இயக்கிய, தயாரித்த அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

பாட புத்தகத்தில் ஒரு சினிமா திரைக்கதை மாணவர்களுக்கு பாடமாக அமைந்தது இதுதான் முதல்முறை. அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட அடையாளம் கொண்ட தயாரிப்பாளரின் தயாரிப்பில் ஜாதி வேற்றுமையை சாடும் கருத்துடன் உருவான ஒரு திரைப்படம் மாணவர்களுக்கு பாடமாக மாறியது தமிழ் திரையுலகுக்கு கிடைத்த பெருமை என்றே குறிப்பிடலாம்.

இதற்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் ரஞ்சித், கதாநாயகன் கதிர், கதாநாயகி ஆனந்தி, மாரிமுத்து உட்பட படக்குழுவுக்கு கோடங்கி இணையதளம் சார்பில் வாழ்த்துகள்.

592 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன