வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: Mari Selvaraj

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.   "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ...
உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உதய நிதியை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!   கர்ணன் மெஹா ஹிட்டுக்குப் பின் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதய நிதியுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்தை உதய நிதியின் ரெட் ஜெயண்ட நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “மாமன்னன்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.  உதய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக  பகத் பாசில், வடிவேலு உட்பட பல நடிக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் உதய நிதியின் அப்பா ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் நடைபெறுகிறது. அந்த ஆட்சியில் உதயநிதியும் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கட்சியில் உதயநிதி இளவரசராக வலம் வருகிறார். இந்த சூழலில் கற்பனை உலகமான சினிமாவில் உதய நிதி “மாமன்னன்” ஆக வலம் வரப்போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வசூல் ரீதி...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்! ஆதித்ய வர்மா படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது....
+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

+2 மாணவர்களுக்கு பாடமாகி தமிழ் திரையுலகை பெருமைபடுத்திய பரியேறும் பெருமாள் படக்கதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்தி பூத்தார் போல வரும் சில படங்கள் காலம் காலமாக மக்களை பேச வைக்கும். இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய மெகா உதாரணம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பரியேறும் பெருமாள். கதிர் , ஆனந்தி, லிஜீஸ் மாரிமுத்து உட்பட பலர் நடித்த இந்த படம் எந்த ஜாதி அடையாளமும் இல்லாமல் ஜாதி துவேஷங்களை தோலுரித்தது. அதோடு திரைக்கதை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது. அதோடு பல நாடுகளில் விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது. இந்த வெற்றியின் மகுடமாக 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் கதையமைப்பு, திரைக்கதை வடிவம் ஒரு பாடமாக இடம் பிடித்து படம் இயக்கிய, தயாரித்த அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது. பாட புத்தகத்தில் ஒரு சினி...