வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்!

ஆதித்ய வர்மா படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன