வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொரானா பரவலை தடுக்க ஆதரவு கேட்ட ரஜினியின் வீடியோவை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்… விதி மீறலாம்..!

 

 

கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் மக்கள் சுய ஊரடங்குக்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நீக்கியதால் ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

இத்தாலியில் 2-வது நிலையில் இருந்தபோது மக்கள் உதாசீனப்படுத்த்யதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்  ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மக்கள் நடமாட்ட பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டுவோம். சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேசி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நிறுவனம் திடீரென நீக்கியுள்ளது. காரணம் டிவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ள வீடியோ என கூறியுள்ளது.

விதிமுறைகளை ரஜினி மீறியுள்ளார் என காரணம் கூறும் டிவிட்டர் நிறுவன செயல் ரஜினிகாந்த்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில் கொரானா பாதிப்பு குறித்தும், இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்றும் தான் ரஜினி கூறியிருந்தார்.

அதோடு இத்தாலி அரசு உத்தரவை அந்த நாட்டு மக்கள் புறந்தள்ளியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளார்கள் அந்த நிலை இந்தியாவில் ஏற்படாமல் தடுக்கதான் இந்த முழு அடைப்பு என ரஜினிகாந்த் கூறியதே விதிகளை மீறியதாக கருதபடுகிறது.

டிவிட்டர் நிறுவனம் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு ரஜினிகாந்த் வீடியோ நீக்கம் ஒரு உதாரணம்.

1,190 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன