
கொரானா பரவலை தடுக்க மார்ச் 31வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!
கொரானா பரவலை தடுக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க
நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவி வந்தது.
இந்நிலையில், கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும் இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
