திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

 

 

உதய நிதியை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

 

கர்ணன் மெஹா ஹிட்டுக்குப் பின் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதய நிதியுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்தை உதய நிதியின் ரெட் ஜெயண்ட நிறுவனம் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “மாமன்னன்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.  உதய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக  பகத் பாசில், வடிவேலு உட்பட பல நடிக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழகத்தில் உதய நிதியின் அப்பா ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் நடைபெறுகிறது. அந்த ஆட்சியில் உதயநிதியும் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கட்சியில் உதயநிதி இளவரசராக வலம் வருகிறார்.

இந்த சூழலில் கற்பனை உலகமான சினிமாவில் உதய நிதி “மாமன்னன்” ஆக வலம் வரப்போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வசூல் ரீதியிலும், உலக அரங்கிலும் பெரும் ஹிட் அடித்தவை. இப்போது அந்த வரிசையில் மாமன்னன் படமும் சேரும் என்றும், உதய நிதிக்கு மாமன்னன் புதிய பரிணாமத்தை தரும் என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை கிளப்பி உள்ளது.  அதில் எருமை கூட்டங்களும், காகங்களும், சங்கிலியால் கட்டப்பட்ட பிரமாண்டமான பாறையும் கதையின் தீவிரத்தை காட்டுகிறது.

228 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன