புதன்கிழமை, மே 15
Shadow

Tag: red giant movies

கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை பி...
கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பி...
உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உதய நிதியை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!   கர்ணன் மெஹா ஹிட்டுக்குப் பின் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதய நிதியுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்தை உதய நிதியின் ரெட் ஜெயண்ட நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “மாமன்னன்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.  உதய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக  பகத் பாசில், வடிவேலு உட்பட பல நடிக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் உதய நிதியின் அப்பா ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் நடைபெறுகிறது. அந்த ஆட்சியில் உதயநிதியும் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கட்சியில் உதயநிதி இளவரசராக வலம் வருகிறார். இந்த சூழலில் கற்பனை உலகமான சினிமாவில் உதய நிதி “மாமன்னன்” ஆக வலம் வரப்போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வசூல் ரீதி...