புதன்கிழமை, மே 15
Shadow

Tag: maamannan

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

பட்டாக்கத்தியுடன் “மாமன்னன்” படத்தில் மிரட்டும் உதய்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் வெளியானது ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.   "மாமன்னன்" படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் இன்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் "மாமன்னன்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என ...
நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கவுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட...
உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

உதயநிதி ஸ்டாலினை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    உதய நிதியை “மாமன்னன்” ஆக்கிய மாரி செல்வராஜ்!   கர்ணன் மெஹா ஹிட்டுக்குப் பின் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதய நிதியுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்தை உதய நிதியின் ரெட் ஜெயண்ட நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு “மாமன்னன்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.  உதய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக  பகத் பாசில், வடிவேலு உட்பட பல நடிக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் உதய நிதியின் அப்பா ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் நடைபெறுகிறது. அந்த ஆட்சியில் உதயநிதியும் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கட்சியில் உதயநிதி இளவரசராக வலம் வருகிறார். இந்த சூழலில் கற்பனை உலகமான சினிமாவில் உதய நிதி “மாமன்னன்” ஆக வலம் வரப்போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வசூல் ரீதி...