சனிக்கிழமை, செப்டம்பர் 19
Shadow

யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கிய கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன