ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

 

“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

நடிகர் சத்யராஜ் நடித்த ‘வால்டர் வெற்றிவேல்’ திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் ‘வால்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே வால்டர் படக்கதையும் , தலைப்பும் எனக்குதான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் சர்ச்சை ஏற்படுத்த பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு பின் வால்டர் சிக்கல் தீர்ந்தது.

இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிபிராஜுடன் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன