திங்கட்கிழமை, அக்டோபர் 5
Shadow

பீர் குடித்ததால் பறி போன வாய்ப்பு – ராதிகா ஆப்தே பகீர்

 

 

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ராதிகா ஆப்தேவுக்கு ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்ததுதான் பெரிய பேரை வாங்கி தந்தது.

அரை நிர்வாணமாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை சொல்லும் போது , அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.

இதனால் எனது உடல் எடை கணிசமாக கூடியது. என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார்.

படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.” என்று கூறுகிறார் ராதிகா ஆப்தே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன