
டாக்டரை மணக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்..!
பிரபல தயாரிப்பாளர் அழகப்பன் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் தன்னுடைய படத்தில் நடிக்க வந்த ஹீரோயின் அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணம் கொஞ்ச நாளில் கசந்து போய் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையால் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து இருவருமே எதுவும் சொல்லாமல் அவரவர் பணிகளில் பிசியாக இருந்தனர்.
இந்த சூழலில் ஏ.எல் விஜய்க்கு குடும்பத்தார் பெண் பார்த்து வந்தனர். ஐஸ்வர்யா என்ற டாக்டர் ஒருவரை விஜய் திருமணம் செய்ய முடிவாகி இருக்கிறது.
இந்த திருமணம் வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

1,505 Views
