ரசிகனை வசப்படுத்தும் வித்தைக்காரன் ஜிவி – கோடங்கி விமர்சனம்

229 Views

 

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி படம் வரும்.
இதுவரை சொல்லப்படாத கதை… என்று சொல்லிக் கொள்ள தகுதி உடைய படம்தான் ஜிவி.
8 தோட்டாக்கள் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த வெற்றி மீண்டும் ஜிவி படம் மூலமாக தான் ஒரு அழுத்தமான வெற்றி கதையின் நாயகன் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

தமிழ் எழுத்தில் அறிமுக இயக்குனர் கோபிநாத் ஒவ்வொரு காட்சிகளையும் நேர்த்தியாக நகர்த்தி உள்ளார்.

கதைப்படி ரோஹிணி வீட்டில் வெற்றியும், கருணாகரனும் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். முடக்குவாத கணவன், கண் தெரியாத மகளுடன் இருக்கும் ரோஹிணி வீட்டில் இருந்த நகைகளை வெற்றி திருடிக் கொள்கிறார். அதற்கு கருணாகரன் உதவி செய்கிறார்.
பார்வையில்லாத மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் கல்யாணம் நடந்ததா இல்லையா , நகை திருட்டு செய்த வெற்றி மாட்டிக் கொண்டாரா, இல்லையா என்பதை ஒரு கைதேர்ந்த சிற்பி போல திரைக்கதையில் செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.
குறிப்பாக ரோஹிணி வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் கதை அப்படியே வெற்றி வாழ்க்கையில் இப்போது நடப்பதை தெரிந்து கொள்ளும் வெற்றி அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் சுவாரஸ்யம்.

படிக்கும் போது அறிவியல் இயற்பியல், வேதியியல், புவியியல் என்று படித்திருப்போம். இது தொடர்பியல் பற்றி நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.
அதுவும் ரசனையோடு இப்படியும் ஒரு திரைக்கதை அமைக்க முடியுமா என்று யோசிக்கும் அளவிற்கு அறிமுக இயக்குனர் கோபிநாத் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

பெரும்பாலும் பிளாஷ்பேக் கதையையும் இப்போது நடக்கும் சம்பவங்களையும் காட்சிப் படுத்தும் போது பெரும்பாலான இயக்குனர்கள் அதை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தும் போது கோட்டை விட்டு விடுவார்கள்.

ஆனால் கோபிநாத் இந்த விஷயத்தில் ஏதோ ஒரு மாயாஜால வித்தையை நிகழ்த்தி இருக்கிறார்.

8 தோட்டாக்கள் பெற்றுத்தந்ததை விட கதாநாயகன் வெற்றிக்கு ஜிவி இன்னும் ஒரு படி உயர்வை கொடுத்திருக்கிறது.

இசையும் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

ரோஹிணி, மைம்கோபி, கருணாகரன், தமிழ், ரமா , அதோடு மோனிகா, அஸ்வினி என இரு நாயகிகள் என எந்த கதாபாத்திரங்களும் சோடை போகவில்லை.

தமிழ் சினிமா வரலாற்றில் பேசப்பட்ட படங்கள் வரிசையில் இடம் பிடிக்கும் தகுதி பெற்ற படம் ஜிவி.

மொத்தத்தில் ஜிவி தமிழ் சினிமா ரசிகர்களின் அறிவுஜிவி..!

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =