வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

மாமாவுக்கு “பேட்ட” கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல லண்டனில் தொடங்கும் தனுஷ் படம்…!

பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே மாமா ரஜினிக்கு பேட்ட படத்தின் மூலம் ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இப்ப மருமகன் தனுஷுக்கு படம் ரெடி பண்ணிட்டார்.

896 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன