வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

அருண் விஜய் அசத்தும் பாக்சர் பர்ஸ்ட் லுக்..!

அருண் விஜய் நடித்து வெளிவர இருக்கும் “பாக்ஸர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அசத்தல் போஸ் கொடுக்கும் அருண் விஜய் புது கெட்டப் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.

சமீபத்தில் “தடம்” படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான “மாஃபியா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், அவரது மற்றொரு படமான “பாக்ஸர்” படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக “இறுதி சுற்று” நாயகி ரித்விகா சிங் நடிக்கிறார். இந்த படத்தின் பாக்ஸிங் காட்சிகளுக்காக வியட்நாம் போய் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் பாக்ஸிங் மேடையில் அருண் விஜய் இருப்பது போல ஒரு போஸ்டரும், ரித்விகா சிங்குடன் அடிப்பட்ட நிலையில் இருப்பது போல ஒரு போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அருண் விஜயின் இந்த கெட் அப் பிரமாதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

562 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன