வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

 

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப்படத்தை ஓணம் பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டம்.

499 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன