வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

 

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்..!

அடங்கமறு’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

883 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன