வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25
Shadow

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

 

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், ‘கண்ணே கலைமானே’ படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், “தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விருது பெறுகிறது”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன