நடிகர் நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

88 Views

 

 

நெப்போலியன் திடீரென ரஜினியை சந்தித்ததன் பின்னணி…!

அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தான் அரசியல் கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

அதே நேரம் தனது ரஜினி மக்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தயார் செய்து வைத்திருப்பதால் எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அப்போது ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் அவ்வபோது ரஜினியை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகரும் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் என்ன பேசினார்கள், என்ன கருத்துகள் பரிமாறப்பட்டது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது அவரது கட்சியில் நெப்போலியன் முக்கியமான தலைவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =