புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

 

2020 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 9ல் ரஜினி தர்பார் ரிலீஸ்..!

முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போல அவரை எதிர்க்கும் வில்லன்களுக்கும் திரைக்கதையில் பலமாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.


பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி என ஏற்கனவே 2 பேர் வில்லன்களாக இருந்தார்கள். இப்போது அவர்களோடு
நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

ரஜினிக்கு படத்தில் இரட்டை வேஷம். அதே போல அவரை எதிர்க்கும் வில்லன்களும் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல கடந்த பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 தேதி பேட்ட ரிலீஸ் ஆகி மெகா ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தர்பார் படமும் வரும் 2020 ஜனவரி 9ம் தேதி  வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய  லைகா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பொங்கலும் ரஜினி பொங்கல் தான்..!

1,248 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன