புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

 

75 நாளில் 100 லொகேஷன்களில் ஷூட்டிங் முடிந்த வாழ்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி இருக்கும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் சார்பில் முதல் படமாக கனா தயாரித்து வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் அந்த படம் மெகா ஹிட் ஆனது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு பற்றி கனா பேசியது.

முதல் தயாரிப்பு ஹிட் ஆன குஷியில் ரியோ நடிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தனது இரண்டாவது தயாரிப்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

எதிர்பார்த்த அளவு வெற்றி இல்லாமல் போனாலும் ரொம்ப மோசமில்லை என்று பேர் வாங்கியது.

கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற அருவி பட இயக்குனர் அருண் பிரபுவை வைத்து தனது நிறுவனம் சார்பில் 3 படத்தை தொடங்கினார்.

வாழ் என்ற பெயரில் தொடங்கிய இந்த படம் புதுமுகங்களை வைத்து அருண் பிரபு இயக்கி இருக்கிறார்.

படம் தொடங்கி 75 நாளில் 100 லொகேஷன்களில் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அருண் பிரபு.

படப்பிடிப்பு முடிந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பட நிறுவனம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன