
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் அஜித் இவர் எச்.வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்.
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர்
பட அறிவிப்பு வெளியானதுமே இந்த படத்தை ஆகஸ்ட் 10 தேதி உலகம் முழுதும் ரிலீஸ் செய்வோம் என அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பே படம் ரிலீஸ் ஆகும் என பரவலாக கூறப்பட்டது.
இந்த சூழலில் அஜித்தின் மாஸான போஸ்டர் ஒன்றுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியயை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்தவகையில் நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் போனிகபூர். இதனால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.
