
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார்.
அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார்.
அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலைதில் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு பேச்சுக்கும் பல எதிர்ப்புகள் வந்தாலும் கமல், சீமான் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர்.
மத்திய அரசின் கைப்பாவையான எச்.ராஜா உள்ளிட்ட பலரும் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
இந்த நிலையில் இனியும் மத்திய அரசின் செயல்பாடுகள் எதையும் விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் அதையும் மீறினால் கைது நடவடிக்கைகள் கூட எடுக்கப்படும் என சூர்யாவுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
அதோடு, வழக்கமாக மத்திய பிஜேபி அரசு தனக்கு எதிராக பேசுபவர்களை மிரட்டும் வருமான வரி ரெய்டு மிரட்டலையும் சூர்யாவுக்கு மறைமுகமாக விடுத்துள்ளதாம்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது யார் யாரெல்லாம் நிதி கொடுத்தார்கள் என்ற விவரங்களை வெளியிட முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஒரு பதிவு வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.

இது போதாதென்று ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை தரக்குறைவான வகையில் காட்சி படுத்தி இருக்கிறார் ஜோதிகா. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து விரைவில் சூர்யாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தாலும் ஆச்சர்யமில்லை. வழக்கமாக பிஜேபி அரசின் மிரட்டல் நடவடிக்கை என்பதால் அடுத்த என்னென நடக்கும் என்பதை ஈசியாக கணிக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.
போதா குறைக்கு நடிகர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவும் சூர்யாவுக்கு அதிகரித்திருப்பதால் தமிழ் சினிமாவில் இருந்து அரசு எதிர்ப்பால் அரசியலில் குதித்த நடிகர்கள் வரிசையில் சூர்யா இணைந்தாலும் ஆச்சர்யமில்லை.
– கோடங்கி
