வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்..!

 

இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவ டாக்டர் பட்டம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இசைத் துறையில் புரிந்து வரும் சாதனைகளுக்காக மதுரை காமராசர், அண்ணா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து 4 டாக்டர் பட்டங்களை இளையராஜா பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஐந்தாவது டாக்டர் பட்டத்தை, குண்டூரில் உள்ள விக்னான் என்ற தனியார் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன