
மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!
விஸ்வாசம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார்.
இதில் தனுஷ் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாஸ் என படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
562 Views
